என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்... யார் முன்னும் கைகட்டி வாய் மூடி நான் நின்று ஆதாயம் தேடாதவன்... அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ......
Thursday, July 2, 2009
கள்ளிக்காட்டு இதிகாசம்
கள்ளிக்காட்டு இதிகாசம் வெறும் புத்தகம்மட்டுமல்ல , என் மக்களின் ஒளிவுமறைவற்றவாழ்க்கையின் பிரதிபலிப்பு .
இந்த நாவலில் வருகின்ற முக்கிய கதாப்பாத்திரம் பேயத்தேவர். இவர் தான் வாழ்ந்த மண்ணையும்,மனைவியையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பவர். இவருக்கு இருக்கின்ற சொத்து ஒரு சிறிய ஒலைக்குடிசை, ஒரு மாடு, முருங்கைமரம்,ஆடுகள்-கோழிகள்,அடர்ந்த கள்ளிக்காடு.
அந்த கிராம மக்களுக்கு இவைகளே சொத்தாக தெரிந்தன. ஆனால், இவைகளை மீறிய ஒன்று - குடும்ப உறவு,பந்தம்,பாசம் என்ற மனித உறவு சங்கலியால் பிணைக்கப்பட்டு ,வாழ்விலும்-சாவிலும் எல்லோரும் பங்கேற்றனர் என்பதே இந்த மண்ணின் மகிமை. இதனை வைரமுத்து அற்புதமான நாவலாக படைத்துவிட்டான்.
பக்கங்களை புரட்ட புரட்ட மனம் வலித்துகொண்டிருந்தது பேயத்தேவரும், மொக்கையும் என் அருகிலேயே அமர்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது .
அவர் பிறந்த ஊர். மண்ணோடு போராடும் மனிதர்களும், ஆறு மாடுகளும், பறவைகளும், ஊரைக் காவல் காத்த பாலைவனத் தாவரங்களும் வைரமுத்துவின் ஐந்து வயது ஆச்சர்யங்கள்.
நிச்சயமா இது ஒரு இதிகாசம் தான் . கிராமத்து எளிய மனிதர்களின் யதார்த்தை அழகா பிரதிபலித்திருப்பார் . இதில் வரும் பெயத தேவர் என்ற மனிதன் வெளியூர் சென்றிருக்கும்போது அவர் மனைவி இறந்த சேதி வரும் அவர் திரும்பி வீடு நோக்கி வரும் போது மனைவியுடன் அவர் வாழ்த வாழ்வை நினைத்து பார்க்கும் அவரது எண்ண ஓட்டம்களை , வாழ்வியல் யதர்த்தம்களை, அழகாக உணர்வு படுத்திருப்பார் . ஓர் எடத்தில் திருமணத்தை பற்றி " நகரத்து திருமணக்கள் உரிமைகளை முன்னிறுத்தி நடப்பவை . கிராமத்து திருமணக்கள் கடமைகளை முன்னிறுத்தி நடப்பவை.'
இந்த நாவலுக்காக வைரமுத்து பெற்ற விருதை விமர்சனம் செய்த மனுசிய புத்திரன் ,ஜெய மோகன் போன்ற அறிவு ஜிவிககுக்கு இந்த மண்ணீன் வாழ்க்கை புரியுமா . இந்த நேரத்தில். கி.ராவையும்,நாஞ்சில் நாடனையும் நினைக்கத்தோன்றுகிறது. ஆனாலும் செம்மீனையும்,காண்டேகரின் 'யயாதியையும் 'படித்தவர்களுக்கு, தமிழில் அப்படியொரு படைப்பு வரவில்லையே என ஏங்கத்தோன்றும். சமீபகாலமாக நவீன படைப்பாளிகளுக்கு, பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம் '- ஒரு கற்பனா தத்வார்த்த படைப்பாக தோன்றி, நிஜவாழ்வின் எல்லைகளைக்கூட தொடமுடியாமல் போனதும், நாமெல்லாம் எதிர்பார்க்காத ஒரு சினிமாக் கவி இந்த 'கள்ளிக்காட்டு இதிகாசத்தைப்படைத்து ' , அறிவுஜீவிகளின் மண்டையைப்பிளக்க செய்ததும், காலத்தின் கட்டாயமாகவும்,என்றுமே நிஜவாழ்வின் எழுத்துக்களே காலங்காலமாக பேசப்படும் என்பதும் உண்மையாக படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
kallikaattu idikkaasam patriya ungal padivum nantraaga ullathu .
nabikaiyudan payanippom .
anpudan
devaraj vittalan
indian army
Post a Comment