இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில்கள், சுற்றுலாத் தலங்களாகவும், ஓட்டல்களாகவும், பள்ளிக் கூடங்களாகவும் மாறி வருவதாக, பாகிஸ்தான் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த 360 இந்து கோவில்கள் உள்ளன. அவற்றுக்குச் சொந்தமாக, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. பாகிஸ்தானில் தற்போது, 39 லட்சம் இந்துக்கள் உள்ளனர். அங்கு, அவர்கள் சிறுபான்மையினர். சமீப காலமாக பாகிஸ்தானில், சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொன்மை வாய்ந்த இந்து கோவில்கள் ஓட்டல்களாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றப்பட்டு வருவதாக, அங்குள்ள இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 700 ஆண்டு பழமையான காளி கோவிலை, ஒரு கும்பல் ஆக்கிரமித்து, ஓட்டலாக மாற்றிவிட்டது. அக்கும்பல் மாத வாடகையாக 850 ரூபாய் மட்டும் அளிப்பதாகவும், புனிதமற்ற முறையில் கோவில் பயன்படுத்தப்படுவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பாக்., இந்து உரிமை இயக்கத் தலைவர் சாயப் தியால் கூறுகையில்,"இதுபற்றி பலமுறை அரசிடம் புகார் அளித்தோம். 2009 ஏப்ரலில் அளித்த புகாரின் அடிப்படையில், அப்போதைய ஓவாய்ஸ் கனி, காளி கோவில் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.
அதேபோல், இஸ்லாமாபாத்தில் உள்ள ராம் குண்ட் மந்திர் என்ற கோவிலும், தற்போது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. அபோடாபாத் நகரில் உள்ள"ஆராய மந்திர்' என்ற கோவில் ஏற்கனவே சிதிலமடைந்திருந்த நிலையில், தற்போது பள்ளிக் கூடமாக செயல்படுகிறது.அக்கோவிலின் அருகில் ஒரு குருத்வாரா, ஒரு பள்ளிவாசல் உள்ளன. கோவில் புதுப்பிக்கப்பட்டால் அந்நகர், மத நல்லிணக்கத்துக்கு நல்ல சான்றாகத் திகழும் என்று, இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குஜ்ரன்வாலா பகுதியில், கி.பி., 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோவில்கள் பாழடைந்த நிலையில், குரங்குகள், கழுதைகள், குதிரைகள் தங்கும் கூடாரங்களாக மாறிவிட்டன. சக்வால் பகுதியில் உள்ள பிரபல அனுமான் கோவில் அங்குள்ள உப்பளத் தொழிலாளர்களின் அலுவலமாக இயங்குகிறது.பெஷாவரில் ஒரு காளி கோவில் அங்குள்ள வர்த்தகர்களால், வணிக வளாகமாக மாற்றப்பட்டு விட்டது. பஞ்சாப் மாகாணத்தில் பக்கார் நகரில் உள்ள ஷீரன் வாலி கோவில், மதரசாவாக மாறிவிட்டது. அங்குள்ள இந்துக்கள் மதரசா செயல்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், பாழடையும் கோவிலைப் புதுப்பித்தால் போதும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 1947ல் நிகழ்ந்த பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது அவர்களால் கோவில்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை பராமரிக்க "வெளியேற்றப்பட்டவர் சொத்து அறக்கட்டளை வாரியம்' (இ.டி.பி.பி.,)என்ற அமைப்பை பாக்., அரசு உருவாக்கியது. இந்த அமைப்பின் கீழ் புனித தலங்கள் மற்றும் கோவில் நிலங்கள் உள்ளன.இந்த வாரியத்திடம் தற்போது, கோவில்களுக்குச் சொந்தமான 1,35,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் 1,25,000 நிலங்கள் பாசனத்திற்குரியவை. இந்த வாரிய நிர்வாகத்தில் சிறுபான்மையினர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை அவர்கள் கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அயோத்திய கலவரத்திதின் மட்டும் பாகிஸ்தானில் 3000 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன .வங்காளதேசத்தில் 2500 கோவில்கள் இடிக்கப்பட்டன. வங்காளதேச தலைநகரான டாக்காவில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற டாக்கீஸ்வரி அம்மன் கோவில் உள்பட ..
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்... யார் முன்னும் கைகட்டி வாய் மூடி நான் நின்று ஆதாயம் தேடாதவன்... அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ......
Friday, March 4, 2011
ஓட்டல்களாக மாறி வரும் பாகிஸ்தான் இந்து கோவில்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment