Friday, March 4, 2011

காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்




இருபது வருடங்கள் முன் இஸ்லாமிய தீவிரவாதத்தால் தங்கள் தாய் மண்ணை விட்டு விரட்டப்பட்ட காஷ்மீர் இந்துக்கள் நேற்று புதன்கிழமை கீர்-பவானி கோயிலில் வழிபட்டனர். இந்த கோயில் ஸ்ரீநகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.
1989ல் பிரிவினைவாதம் காஷ்மீரில் வெடித்ததும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இந்துக்கள் ஸ்ரீநகரை விட்டு துரத்தப்பட்டார்கள். அவர்கள் காஷ்மீரின் தெற்கு பிரதேசங்களிலும் (முக்கியமாக ஜம்முவில்), இந்தியாவின் மற்ற இடங்களிலும் அகதிகளாக வாழ்ந்துவருகிறார்கள்.
பல வருடங்களுக்குப்பின் இந்த கோயிலின் திருவிழாவில் எப்போதும் காணாத கூட்டம் கூடியது. உணர்ச்சிப்பெருக்குடன் இந்துக்கள் ஒருவரை ஒருவரை கட்டி அணைத்து கண்ணீர் மல்கினார்கள்.
“நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்” என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு “நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்” என்றார் ரோஷன் லால்.
ஆனால், சில காஷ்மீர் இந்துக்கள் தங்கள் வீடுகளை விற்றுவிட்டார்கள். வேறு சிலர் கலவரத்தில் தங்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள்.


புகழ் பெற்ற வீரபாவனி அம்மன் ஆலயம் உள்பட 70 இந்து கோவில்கள் இடிக்க பட்டன .


No comments: