Saturday, November 15, 2008

காதல்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம்
தேடுதே
மேயல் (?) பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத்
தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம்
தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போஅதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று
வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே.....!
!

3 comments:

Muruganandan M.K. said...

எழுத்துக்களை கலரில் போடாமல் வெள்ளையில் போட்டால் உங்கள் புளக்கில் தெளிவாகத் தெரியும் போலிருக்கிறதுt

nandhu said...

vanakkam

thankz for ur comment. i changed colour.

Muruganandan M.K. said...

இப்பொழுது அழகாகத் தெளிவாக இருக்கிறது.
கவிதை நன்றாக இருக்கிறது.
"முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே" ...சுவையான கற்பனை