Tuesday, July 7, 2009

சி .ஆர் .ரவீந்தரன் என்னும் படைப்பாளி .

கொங்கு வட்டார எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் .நாவல் ,சிறுகதை ,கட்டுரை என நிறைய எழுதிருக்கிறார் .இவருடைய எழுத்தக்களில் கொங்கு வட்டார வழக்குகல்லும், இம் மக்களின் யதார்த்த வாழ்வும் மிக மிக்கிய இடம் வகிக்கும் . எண்ண ஓட்டங்களிலே கதையை நகர்த்தக்கூடிய படைப்பாற்றல் மிகுந்த இவரது கதைகளை வெளிட வெகு ஜன பத்திரிக்கையை நாடியதில்லை .அதனாலேய இவரது எழுத்தக்கள் வெகு ஜன மக்களை சென்றடிவதில் சிரமம் இருந்தது இதன் காரணமாக எஸ் .ராமகிருஷ்ணன் ,நாஞ்சில் நாடான் போல் வெகு ஜன வட்டத்தை பெற முடியவில்லை .இவர் எழுதிய பல நூல்கள் இவரிடமே இல்லை .(நான் நூலகத்திலே படித்தேன் ). ஆர்.சண்முகசுந்தரம் (பனித் துளி ,நாகம்மா ,அறுவடை . போன்ற அருமையான கதைகளை படைத்தவர் .இவருடைய இவருடைய எழுத்துக்களும் பெருமளவு பிரதி இல்லாமலே போனது ).கொங்கு வட்டார வழக்குகளில் அதிகம் பதிவு செய்தவர் . அவருக்கு பிறகு ரவிந்தருடைய பதிவு குறிப்பிட தக்கது . பெருமால் முருகனை ஓரளவு குறிப்பிடலாம் .(எஅறு வெயில் ,கூலா மாத்ரி ) இவர் ஓரளவு வெகு ஜன தளத்தில் இயங்குவதால் பரவலான அறிமுகத்தை கொண்டுள்ளார் .சி .ஆர் .ரவீந்தரன் எழுத்துக்களில் மஞ்சு வெளி ,காக்கை பொன் ,ஈரம் கசித்த நிலம் ( மத்திய அரசு பரிசு பெற்ற நாவல் ) குறிப்பிடலாம் . சிறுகதை தொகுப்பாக வெளி வந்த பசியின் நிறம் சிறப்பான ஒரு பதிவு .ஜெஅம்ஸ் அலனுடைய தன்னம்பிக்கை புத்தகமொன்றை தமிழில் மொழி பயத்துள்ளார் . ஒரு எளிய விவசாயே யான இவர் விளம்பரத்துக்காக தன் நோக்கக்களை மாற்றி கொள்ளாதவர் . அற்புதமான படைப்புக்களை தந்திருக்கும் இவருக்கான முக்கியத்துவம் இல்லக்கிய வட்டத்தில் குறைவு . என் இந்த நிலை ?. இங்கே கருத்து என்று எதையாவது சர்ச்சை ( கவனிக்க படவேண்டும் என்பதருக்காக ) செய்து கொண்டிருக்க வேண்டுமோ ? ஜெயா மோகன் , 0' டிகிரி புகழ் சாரு நிவேதா, கேடி .அ. மார்க்ஸ் போல .

No comments: